பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)

#பன்னீர் வகை உணவுகள்
பன்னீர் பிரெட் பீட்சா கப் (Paneer Bread Pizza Cup Recipe in Tamil)
#பன்னீர் வகை உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
பொடியாக நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய்,பனீர்,வேகவைத்த சோளம், அரை டீஸ்பூன் சில்லி ஃப்ளேக்ஸ், அரை டீஸ்பூன் உப்பு தூள் சேர்த்து நன்றாக கலந்து ஸ்டஃப்பிங் ரெடி பண்ணவும்.
- 2
ஒரு வட்டமான மூடி வைத்து அழுத்தி ப்ரெட் ஸ்லைஸ்களை வட்ட வடிவத்தில் செய்து கொள்ளவும்.
- 3
வட்ட வடிவ பிரெட் ஸ்லைஸ்களில் இரண்டு புறமும் வெண்ணை தடவி கொள்ளவும்.
- 4
பிரெட் ஸ்லைஸ்களில் ஒரு புறம் மட்டும் தக்காளி சாஸ் தடவவும்.
- 5
ஒரு மஃப்பின் டிரே எடுத்துக்கொண்டு அதன் உள்ளே வெண்ணை தடவி கொள்ளவும்.
- 6
வட்ட வடிவ பிரெட் ஸ்லைஸ்களை இந்த டிரேயில் அடுக்கிக் கொள்ளவும்.
- 7
நாம் செய்து வைத்துள்ள ஸ்டப்பிங்கை பிரெட் ஸ்லைஸ்களில் நிரப்பவும்.
- 8
இந்த ஸ்டஃப்பிங் மேல் துருவிய சீஸை போடவும்.
- 9
இந்த டிரேவை ஒரு OTG அவனுக்குள் 180 டிகிரி செல்சியஸ் வைத்து பத்து நிமிடங்கள் பேக் செய்யவும்
- 10
10 நிமிடங்கள் கழித்து வெளியே எடுத்து ஆறவிடவும்.
- 11
சிறிது ஆற விட்டு ஒரு ஸ்பூனால் வெளியே எடுத்தால் பிரெட் பீட்சா கப் தயார்.
- 12
தக்காளி சாஸ் சேர்த்து கொடுத்தால் குழந்தைகள் இதை விரும்பி சாப்பிடுவார்கள்
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்