😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋

#பன்னீர்/மஷ்ரூம்
😋 காளான் சுக்கா, mushroom chukka Recipe in Tamil)😋
#பன்னீர்/மஷ்ரூம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எண்ணெய் சேர்க்காமல் வெறும் வாணலியில் வறுத்து எடுத்து நன்கு பொடித்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணை காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை சேர்த்து நன்கு பொரிந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை வதக்கவும்.பின்பு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி ஐந்து நிமிடம் மிதமான சூட்டில் வேக விடவும்.
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் சுத்தம் செய்து நறுக்கிய காளானை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு பொடித்து வைத்துள்ள பொடியை சேர்த்து கிளறி விடவும்.
- 5
காளானில் உள்ள தண்ணீர் வற்றி எண்ணெய் பிரிந்து வரும் நிலையில் நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் விருப்பப்பட்டால் நெய்யில் வறுத்த முந்திரி சேர்த்து கலந்து விடவும். சுவையான மஷ்ரூம் சுக்கா தயார் 😋
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட்