தூதுவளைச் சோறு (Thoothuvalai Soru Recipe in Tamil)

#ஆரோக்கியஉணவு
தூதுவளை சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சூட்டு உடம்புக்காரர்கள், மூல வியாதி உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.
தூதுவளைச் சோறு (Thoothuvalai Soru Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவு
தூதுவளை சளி, இருமலுக்கு நல்ல மருந்து. சூட்டு உடம்புக்காரர்கள், மூல வியாதி உள்ளவர்கள் அளவோடு சாப்பிடுவது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
தூதுவளை இலையை சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயம் தோல் நீக்கிக் கொள்ளவும்.
- 2
தூதுவளை இலை முள், நரம்பு நீக்கி பொடியாக நறுக்கவும். சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். மிளகை ஒன்றிரண்டாகப் பொடிக்கவும்.
- 3
வாணலியில் நெய் ஊற்றி வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் நறுக்கிய தூதுவளை இலையைச் சேர்த்து வதக்கவும்.
- 4
தூதுவளை இலை நன்கு சுருண்டு வெந்ததும் வடித்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கிளறவும்.
- 5
சூடான தூதுவளை சாதத்தை சாப்பாட்டுக்கு முன் இரண்டு கவளம் மூன்று நாட்கள் சாப்பிட சளி, இருமல் குணமாகும்.
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை மல்டி தால் சாம்பார் சாதம் (saamai multi daal samba
- சிவப்பு அவல் உணவு (ஆல் இன் ஆல் ரெசிபி) (Sivappu aval unavu Recipe in Tamil)
- ஆந்திரா பெசரெட் / பச்சை பயிறு தோசை(pachai payiru dosai Recipe in tamil)
- வாழைக்காய் ஃப்ரை (Vaalaikai fry recipe in tamil)
- ஈரல் மிளகு தொக்கு (eeral milagu thokku recipe in Tamil)











கமெண்ட்