பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)

#2019
பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக்

சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய:
- 2
ஓவனை 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடாக்கவும்
- 3
கேக் மோல்டில் பட்டர் தடவி பட்டர் பேப்பர் விரித்து அதன் மேல் மீண்டும் பட்டர் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக வைக்கவும்
- 4
மைதா உடன் பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும்
- 5
பட்டர் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 6
முட்டை உடன் பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் சேர்த்து தனியாக நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 7
பின் அடித்து வைத்துள்ள சர்க்கரை பட்டர் கலவையுடன் அடித்து வைத்துள்ள முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்யவும்
- 8
பின் ஜலித்து வைத்துள்ள மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து ஒரு புறமாக கலக்கவும்
- 9
பின் ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி சூடான ஓவனில் வைத்து 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 35_40 நிமிடங்கள் வரை பேக் செய்து கொள்ளவும்
- 10
பின் மூன்று மணி நேரம் வரை நன்கு ஆறவிடவும்
- 11
ஐசிங் செய்ய:
- 12
பட்டர் உடன் ஐசிங் சுகர் ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 13
பின் பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் மற்றும் மிகவும் குறைந்த அளவு கலர் (அடர் மஞ்சள் நிறத்தில் வர கூடாது) சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 14
கேக் ஐ இரண்டு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்
- 15
பின் ரெடியாக உள்ள க்ரீம் ஐ தடவவும்
- 16
பின் மேல் இன்னொரு துண்டு கேக் ஐ வைத்து சர்க்கரை சிரப் ஐ ஊற்றவும்
- 17
பின் க்ரீம் ஐ கேக் முழுவதும் தடவி விடவும்
- 18
பின் ரெடியாக ஆறவைத்துள்ள கேக் துண்டை வைத்து சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 19
ஐசிங் பொதுவாக நம்முடைய ரசனை கற்பனை வடிவமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது
- 20
பட்டர் ஸ்காட்ச் செய்ய:
- 21
அடி கணமான வாணலியில் சர்க்கரை ஐ சேர்த்து மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 22
சர்க்கரை சூடாகி கொஞ்சம் கொஞ்சமாக உருகி கரைய ஆரம்பிக்கும்
- 23
மெல்லிய தீயில் வைத்து நிதானமாக கிளறவும்
- 24
சர்க்கரை முழுவதும் கரைந்து கொஞ்சம் கொஞ்சமாக நிறம் மாறி லெமன் கலரில் வரும் போது அடுப்பை அணைத்து விட்டு அந்த சூட்டிலே தொடர்ந்து கிளறி தேன் கலரில் வரும் போது இறக்கி நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி ஆறவிடவும்
- 25
பின் சப்பாத்தி குழவியால் நன்கு இடித்து கரகரப்பாக உடைத்து வைக்கவும்
- 26
இதை கேக் சைடு முழுவதும் ஐசிங் மேல் நிதானமாக ஒட்டி விடவும்
- 27
சுவையான பட்டர் ஸ்காட்ச் கேக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்