சோன் பப்டி (Soan papti Recipe in Tamil)

Sudha Rani
Sudha Rani @cook_16814003
Coimbatore

# 2019
சின்ன வயதில் இருந்தே மிகவும் பிடித்தமான ஸ்வீட் முயற்சி செய்யறபோது எல்லாம் நன்றாக வந்ததே இல்லை சரி என்று கொஞ்சம் நாள் விட்டுட்டேன் பின் மீண்டும் 21_12_19 அன்று எனது மகனின் பிறந்த நாள் முன்னிட்டு முயற்சி செய்து பார்த்தேன் சூப்பர் என்று சொல்ல முடியவில்லை என்றாலும் சுமார் என்று சொல்வதற்கு இல்லாமல் ஓரளவிற்கு நன்றாகவே வந்ததும் கரைட்டான பீஸ் வரவில்லை மற்றபடி டேஸ்ட் எல்லாம் நன்றாக இருந்தது மற்றவர்களின் பாராட்டையும் பெற்று தந்தது

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
12 பரிமாறுவது
  1. 1/2கப் மைதா
  2. 1/2கப் கடலைமாவு
  3. 1கப் சர்க்கரை
  4. 1/2ஸ்பூன் ஏலக்காய்த்தூள்
  5. 1ஸ்பூன் லிக்விட் குளுகோஸ்
  6. 3/4கப் நெய்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    அடி கணமான வாணலியில் சிறிது நெய் விட்டு சூடானதும் மைதா மற்றும் கடலைமாவு ஐ வாசனை வர வறுத்து எடுக்கவும்

  2. 2

    சர்க்கரை உடன் தண்ணீர் மற்றும் ஏலத்தூள் சேர்த்து கொதிக்க விடவும்

  3. 3

    கம்பி பதம் வந்ததும் சிறிது பாகை தண்ணீரில் போட்டு கைகளில் எடுத்து உருட்ட வந்தால் பதம் ரெடி

  4. 4

    அப்போது சிறிது தண்ணீரில் லிக்விட் குளுகோஸ் ஐ சேர்த்து நன்கு கரைத்து ஊற்றவும்

  5. 5

    இப்போது பாகு மஞ்சள் நிறத்தில் இருக்கும்

  6. 6

    தொடர்ந்து சற்று கணமான வாணலியில் மீதமுள்ள நெய் விட்டு சுடச்சுட இந்த பாகை கொட்டி கிளறவும்

  7. 7

    சிறிது நேரத்தில் தேன் கலரில் பந்து போல் சுருண்டு வரும் போது வறுத்து வைத்துள்ள மைதா மற்றும் கடலைமாவு ஐ சிறிது சிறிதாக சேர்த்து வேகமாக கிளறவும்

  8. 8

    உடனே நெய் தடவிய ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்

  9. 9

    நன்கு ஆறியதும் துண்டுகள் போடவும்

  10. 10

    சர்க்கரை இரண்டு கம்பி பதத்தில் வந்ததும் மீதமுள்ள செய்முறையை செய்யவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudha Rani
Sudha Rani @cook_16814003
அன்று
Coimbatore

Similar Recipes