முருங்கைக்கீரை மிளகு குழம்பு🌿 (murungai keerai kulambu Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
முருங்கைக்கீரை மிளகு குழம்பு🌿 (murungai keerai kulambu Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக் கீரையை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்றாக அலம்பிக் கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் தாளித்து பூண்டு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்
- 3
வெங்காயம் தக்காளி வதங்கியதும் அலம்பிய முருங்கைக்கீரையை சேர்த்து, உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.
- 4
கீரை நன்கு வெந்ததும் வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்.
- 5
பருப்பு நன்கு கொதித்ததும் கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் மிளகை நன்கு பொடி செய்து அதில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
- 6
சாம்பார் பொடிக்கு பதில் மிளகு சேர்த்து முருங்கைக்கீரை குழம்பை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11580408












கமெண்ட்