முருங்கைக்கீரை மிளகு குழம்பு🌿 (murungai keerai kulambu Recipe in Tamil)

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

முருங்கைக்கீரை மிளகு குழம்பு🌿 (murungai keerai kulambu Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. முருங்கை கீரை ஒரு கட்டு
  2. 1 கப் வேகவைத்த துவரம் பருப்பு
  3. 1டீஸ்பூன் கடுகு
  4. 1டீஸ்பூன் சீரகம்
  5. 2காய்ந்த மிளகாய்
  6. 10 பூண்டு
  7. 10சின்ன வெங்காயம்
  8. 2தக்காளி
  9. 1டேபிள் ஸ்பூன் மிளகு
  10. 1/4டீஸ்பூன்மஞ்சள் தூள்
  11. உப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முருங்கைக் கீரையை சுத்தம் செய்து உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீரில் 10 நிமிடம் ஊறவைத்து நன்றாக அலம்பிக் கொள்ளவும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் காய்ந்த மிளகாய் தாளித்து பூண்டு சின்ன வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    வெங்காயம் தக்காளி வதங்கியதும் அலம்பிய முருங்கைக்கீரையை சேர்த்து, உப்பு மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும்.

  4. 4

    கீரை நன்கு வெந்ததும் வேக வைத்த பருப்பை அதனுடன் சேர்க்கவும்.

  5. 5

    பருப்பு நன்கு கொதித்ததும் கடைசியாக ஒரு டேபிள் ஸ்பூன் மிளகை நன்கு பொடி செய்து அதில் சேர்த்து ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

  6. 6

    சாம்பார் பொடிக்கு பதில் மிளகு சேர்த்து முருங்கைக்கீரை குழம்பை செய்து பாருங்கள் சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
BhuviKannan @ BK Vlogs
அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

Similar Recipes