தூதுவளை குழம்பு
#எதிர்ப்பு சக்தி உணவுகள்
சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் தூதுவளை,10 வெங்காயம், 1 தக்காளி, இஞ்சி,10 பல் பூண்டு மிளகு சீரகம் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 3
பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து கடுகு சேர்த்து தாளிக்கவும் பின்னர் அதில் சின்ன வெங்காயம் கருவேப்பிலை தக்காளி பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
பின்னர் அதில் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கவும்
- 5
பின்னர் அதில் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும்.
- 6
நன்கு கொதித்த உடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கி விடவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12159242




கமெண்ட்