கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ தனியே நன்றாக மசியும் அளவு வேக வைத்து ஆறியதும் தோல் உரித்து மாவாக மசித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மசித்த உருளைக்கிழங்கு துருவிய கேரட் சாதம் மசாலா வகைகள் உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
- 3
உருளைக்கிழங்கு சாதத்தில் இருக்கும் பிசுபிசு ஐ போக்க கார்ன் பளார் பிரட்கிரம்ஸ் 1 மேஜைக்கரண்டி சேர்த்து கொள்ளவும் பின் பொடியாக நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 4
பின் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.
- 5
1 மேஜைக்கரண்டி மைதா 1/2 மேஜைக்கரண்டி கார்ன் பளார் 1 தேக்கரண்டி மிளகு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு கலந்து கொள்ளவும். பிரட் கிரம்ஸ் எடுத்து கொள்ளவும்.
- 6
உருட்டி வைத்துள்ள பால்ஸ் ஐ மைதா கார்ன் ப்ளார் கலவையில் முக்கி பிரட்கிரம்ஸ் இல் உருட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 7
கேரட் உருளைக்கிழங்கு பால்ஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்