ரவை பிரட் குலாம் ஜாமுன்
சமையல் குறிப்புகள்
- 1
ரவையை லேசாக வறுத்து கொள்ளவும். பிரட் ஐ மிக்சியில் அரைத்து பொடியாக்கி வறுத்த ரவையுடன் கலந்து கொள்ளவும்.
- 2
ஒரு சிட்டிகை உப்பு ஏலக்காய் தூள் சேர்த்து பாலை சிறிது சிறிதாக ஊற்றி லேசாக பிசைந்து கொள்ளவும்.
- 3
1 கப் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து சர்க்கரை பாகு தயார் செய்து கொள்ளவும். 1 கம்பிபாகு இருக்க வேண்டும்.
- 4
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் சூடேற்றி மிதமான சூட்டில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 5
பொறித்த உருண்டைகளை சர்க்கரை பாகில் பொட்டு 2 மணிநேரம் மூடி வைக்கவும்.
- 6
ரவை பிரட் குலாப் ஜாமுன் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12275339




கமெண்ட்