கேரட் முள்ளங்கி சாம்பார்🥕

#கேரட்
கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்
கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியவாறு முள்ளங்கி மற்றும் கேரட்டை வட்டமாக அறிந்து கொள்ளவும். வெங்காயத்தை அறிந்து கொள்ளவும். தக்காளியை பொடியாக அரிந்து கொள்ளவும். ஒரு கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் தண்ணீர் சேர்த்து அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள்தூள் கொஞ்சமாக கால் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். 4 விசில் விட்டு நங்கு வேக வைத்துக் கொள்ளவும். ஒரு சிறிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அரிந்த வெங்காயத்தையும் ஒரு பச்சை மிளகாயும் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதனுடன் முதலில், அரிந்த முள்ளங்கியை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கிக் கொள்ளவும். பிறகு தக்காளி சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அதன் பிறகு கேரட் சேர்க்கவும். பிறகு 3 ஸ்பூன் சாம்பார் தூள் சேர்த்து உடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். நன்கு கரண்டியால் கலந்து விடவும்.
- 3
ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து கலந்து விட்டுஅதனுடன் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து குக்கரை மூடி இரண்டு சவுண்ட் வரும் வரை காய்கறிகளை வேக விடவும். பிறகு அதனுடன் வெந்த பருப்பை சேர்த்து ஒரு கொதி விடவும். குழம்பு நன்கு கொதித்தவுடன் கரைத்து வைத்த புளித்தண்ணீரை சேர்த்து மீண்டும் ஒரு கொதி கொதிக்க விடவும்.
- 4
புளித்தண்ணீர் சேர்த்து பச்சை வாசனை போனவுடன் நன்கு கலந்துவிட்டு. ஒரு எண்ணெயில் கடுகு உளுத்தம்பருப்பு பெருங்காயத்தூள் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும்.பொடியாக அரிந்த கொத்தமல்லி தழையை கடைசியாக குழம்பில் சேர்க்கவும். சுவையான கேரட் முள்ளங்கி சாம்பார் ரெடி. சாப்பாட்டிற்கும், காலை உணவு இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். நாங்கள் இன்று காலை டிபன் வெண் பொங்கலுக்கு தேங்காய் சட்னியுடன் கேரட் முள்ளங்கி சாம்பார் சேர்த்து தொட்டு சாப்பிட்டோம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரட் முள்ளங்கி ஊறுகாய்🥕🥕
#கேரட்#bookஇந்த ஊறுகாய் செய்முறை மிகவும் எளிதானது. சுவையானதும் கூட. கேரட் மற்றும் முள்ளங்கி கொண்டு செய்த ஊறுகாய் ஆகும். சப்பாத்தி, தயிர் சாதம் போன்றவற்றுடன் தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். எப்போதும் போல் மாங்காய் எலுமிச்சங்காய் போன்றவற்றின் ஊறுகாய் செய்வதற்கு இது போன்ற காய்கறிகளிலும் ஊறுகாய் முயற்சி செய்து பார்க்கலாம்.😋🌶️🍛 Meena Ramesh -
பாசி பருப்பு சாம்பார்
#lockdown #bookவீட்டில் இருந்த பாசி பருப்பில் காய் சேர்க்காமல் செய்த சாம்பார்.இட்லி தோசை பொங்கல் சப்பாத்தி பூரி எல்லாவற்றிற்கும் இது சுவையான ஜோடி . Meena Ramesh -
கேரட் சட்னி🥕🌶️
#czarrot #bookகேரட் வைத்து செய்த சட்னி. இட்லி, தோசைக்கு தொட்டுக்கொள்ள மிக மிக சுவையாக இருந்தது. நீங்களும் ஒருமுறை இதனை முயற்சி செய்து பார்க்கலாம்.கண்டிப்பாக இந்த கேரட் சட்னி இன்சுவை உங்கள் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் ❤️. கேரட் சாப்பிட மறுக்கும் குழந்தைகளும் இந்த சட்னியை விரும்பி சாப்பிடுவார்கள். பூரி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். டிப்ஸ்:1. தோல் சீவிவிட்டு செய்யவும். சட்னிக்கு நல்ல நிறம் கிடைக்கும்.2. கொஞ்சம் காரம் அதிகமாக சேர்க்கவும். சுவை அலாதியாக இருக்கும். லஞ்ச் பாக்ஸ் க்கு ஏற்ற சட்னி. Meena Ramesh -
முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)
முள்ளங்கி வாசனை பிடிக்காதவர்கள் கூட இந்த முறையில் செய்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அவ்வளவு ருசியாக இருக்கும் ஒரு சிறிய மாற்றம் செய்தால் முள்ளங்கி சாம்பார் மிகவும் ருசியாக கிடைக்கும் Banumathi K -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
முள்ளங்கி கதம்ப சாம்பார்.
#everyday-2 முள்ளங்கி கூடே வெங்காயம், கத்திரிக்காய், வெண்டைக்காய், தக்காளி சேர்த்து செய்த சுவைமிக்க கதம்ப சாம்பார்... Nalini Shankar -
மினி சாம்பார் நெய்இட்லி
#goldenapron3#இட்லி வகைகள்.எத்தனை வகை வகையான இட்லிகள் செய்தாலும் மினி சாம்பார் இட்லி என்றால் சிறு குழந்தைகள் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள் அத்துடன் கோல்டன் அப்புறம் 3இல் அரிசி என்று அரிசி உள்ளது அதனால் மினி இட்லி பகிர்கின்றேன் Aalayamani B -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
சிகப்பு பூசணி அவரைக்காய் சாம்பார்🎃
#sambarrasamவெங்காயம் தக்காளிபூண்டு சேர்க்காத பருப்பு சாம்பார். மிகவும் சுவையாக இருக்கும். விரத நாளன்று செய்வதற்கு ஏற்ற பருப்பு சாம்பார். நாட்டுக்காய் கொண்டு செய்தது. என் கணவருக்கு மிகவும் பிடிக்கும். எனக்கும் கூட. Meena Ramesh -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
கேரட் பர்பி🥕
#carrot # bookகேரட் பர்பி சுவையான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். கேரட் சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகள் கூட இம்முறையில் செய்து கொடுத்தால் மிகவும் பிரியத்துடன் சாப்பிடுவார்கள். மேலும் கேரட் வளரும் குழந்தைகளுக்கு கண் பார்வைக்கு மிகவும் நல்லது. நெய், சர்க்கரை இரண்டும் மிகவும் குறைவான அளவிலேயே இதற்கு செலவாகும். Meena Ramesh -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari -
சீரக சாம்பார்
#everyday2என் அம்மாவின் ஸ்பெஷல் ரெசிபி இந்த சீரக வெங்காய சாம்பார்.வெறும் சின்ன வெங்காயம் மற்றும் சீரகம் கொண்டு செய்யும் பருப்பு சாம்பார் இட்லி தோசை மற்றும் சாப்பாட்டிற்கு ஏற்றது. சாம்பார் மிகவும் வாசமாக இருக்கும் Meena Ramesh -
துவரம் பருப்பு முள்ளங்கி சாம்பார் (Thuvaram Paruppu Mullangi Sambar Recipe in Tamil)
#Jan1*எந்தவொரு இந்திய சமையலறையிலும் புரதம் நிறைந்த துவரம் பருப்பு ஒரு பிரதான உணவாகும். இது அரிசி அல்லது சப்பாத்தியுடன் சுவையான துணையை உருவாக்குகிறது மற்றும் இது ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.ஃபோலிக் அமிலம் நிறைந்ததால், துவரம் பருப்பு தமிழகம் முழுவதும் பல உணவுகளில் சேர்க்கப்பட்டுள்ளது.அதிலும் சாம்பார் என்றாலே துவரம் பருப்பு வைத்து தான் பெரும்பாலும் செய்வார்கள். kavi murali -
அரைத்துவிட்ட வெண் பூசணி சாம்பார்
#bookமதிய உணவிற்கு ஏற்ற சாம்பார். சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். என் மாமியாரின் ஸ்பெஷல் ரெசிபி.. என் மகனுக்கு மிகவும் பிடித்த சாம்பார். தயிர் பச்சடியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். தேங்காயை அரைத்து விடுவதால் துவரம் பருப்பு குறைவாகத்தான் தேவைப்படும். Meena Ramesh -
பூண்டு,கத்திரிக்காய் பருப்பு சாம்பார்🍆
#sambarrasamகத்திரிக்காயை எந்த விதத்தில் செய்தாலும் பூண்டு சேர்த்துக் கொண்டால் மிகவும் சுவையாக இருக்கும்.கத்திரிக்காய் கூட்டு, கத்திரிக்காய் பொரியல் கத்திரிக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் இப்படி எந்தவகையிலும் கத்தரிக்காய் உடன் பூண்டு சேர்த்து செய்தால் சுவை சூப்பராக இருக்கும். Meena Ramesh -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
பாலைக்கீரை சாம்பார் (Palak keerai sambar recipe in tamil)
பாலைக்கீரையில் புளி இல்லாத சாம்பார் வைத்தால் சாப்பிட சுவையாக இருக்கும் #samberrasam Sundari Mani -
தக்காளி சாம்பார்
#book இட்லி தோசைக்கு இந்த தக்காளி சாம்பார் சுவையாக இருக்கும். சப்பாத்தி பூரிக்கும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். Meena Ramesh -
முள்ளங்கி சாம்பார் செய்வது எப்படி(mullangi sambar recipe in tamil)
இந்த முறை எளிமையானது. சுவை நன்றாக இருக்கும் Food Panda -
ரேஷ்மி பனீர்🧀🌶️
#golden apron3 #book #immunityபால் பொருட்களில் ஒன்றான பனீர் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் குடைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்ப்பதால் உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் எந்தக் கிருமி தொற்றும் ஏற்படாது ஆரோக்கியத்துடன் இருக்கலாம். அந்த ரேஷ்மி பனீர் ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் சுவையானதும் கூட.😋😍 Meena Ramesh -
வறுத்து அரைத்த தக்காளி சாம்பார்(tomato sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசை, பணியாரம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள சுவை அருமையாக இருக்கும். punitha ravikumar -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
ரசம் சாதம் (Rasam satham recipe in tamil)
#onepotஇந்த மாதிரி ரசம் சாதம் எனக்கு ரொம்ப பிடிக்கும். எப்போதோ ஒரு முறை பெங்களூர் இஸ்கான் கோவிலில் இதை பிரசாதமாக சாப்பிட்டிருக்கிறேன். அந்த சுவையை ஞாபகம் வைத்து இன்று இந்த ரசம் சாதம் செய்தேன். குழந்தைகளுக்கு நாம் ஊட்டிவிடும் உப்பு பருப்பு சேர்த்த ரசம் சாதம் தான் இது. Meena Ramesh -
வெஜிடபிள் குருமா(vegetable kurma recipe in tamil)
கேரட், உருளைக்கிழங்கு, பச்சைப்பட்டாணி சேர்த்து செய்யும் இந்த குருமா மிகவும் அருமையாக இருக்கும். சப்பாத்தி, பூரி, கீரைஸ் போன்றவற்றிற்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
கேரட் சில்லி🥕🍟
#carrot காலிஃப்ளவர் மற்றும் மஸ்ரூம் சில்லி செய்வதைப்போல கேரட்டில் ட்ரை செய்தேன். மாலை நேர ஸ்னாக்ஸ் சூப்பராக ரெடியானது. Hema Sengottuvelu -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)
பழங்காலத்து கிராமத்தில் செய்த இந்த பலாக்கொட்டை, கத்தரிக்காய் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும். சாதம், இட்லி, தோசை போன்ற எல்லா உணவுகளுடன் பொருத்தமாக இருக்கும்.#vk Renukabala -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh
More Recipes
கமெண்ட்