கேரட் பாதாம் போளி (carrot badam boli recipe in tamil)

கேரட் பாதாம் போளி (carrot badam boli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்
- 2
பாதாம் பருப்பை நன்றாக பொடித்து வைக்கவும்
- 3
ஒரு பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு அரைத்த கேரட்விழுதை பச்சை வாசம் நீங்கும் வரை வதக்கிக்கொள்ளவும்
- 4
பின்பு அதனுடன் பாதாம் பொடியை சேர்த்து அடுப்பை குறைந்த தீயில் வைத்து வதக்கவும்
- 5
பின்பு 1/2 கப் சீனியை சேர்த்து கிளறவும்,அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து,அடுப்பை அணைத்துவிட்டு,இதை நன்றாக ஆறவிடவும்.
- 6
கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொள்ளவும்,ஒரு சிட்டிகை உப்பு சேர்க்கவும்,1/2 கப் தண்ணீர்,2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
- 7
பிசைந்த மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை மாவை எடுத்து அதனுள் கேரட் பூரணம் வைக்கவும்
- 8
பின்பு இலையிலோ அல்லது பிளாஸ்டிக் கவரிலோ 1 டீஸ்பூன் நெய் தடவி போளி தட்டிகொள்ளவும்
- 9
தோசை கல்லை அடுப்பில் வைத்து,மிதமான சூட்டில் போளியை சமைத்து எடுக்கவும்,விருப்பபட்டால் நெய் சேர்க்கலாம்
- 10
சுவையான கேரட் போளி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes





கமெண்ட்