தேங்காய் பர்பி (Cocount burfi) (Thenkaai burfi recipe in tamil)

தேங்காய் நிறைய நார் சத்தை கொண்டுள்ளது. உடலுக்கு தேவையான வைட்டமின், கால்சியம் போன்ற சத்து நிறைந்த தேங்காய் வைத்து செய்த பர்பி சாப்பிட சுவையாக இருக்கும்.
#Cocount

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயை சூடு செய்து, அதில் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வறுத்து, பின் சர்க்கரை, பால் சேர்த்து கலக்கிக்கொண்டே இருக்கவும்.
- 2
ஸ்டாவ்வை மிதமான சூட்டில் வைத்து கை விடாமல் கலக்கவும்.
- 3
பின் ஏலக்காய் பொடி, ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்து கலக்கவும்.
- 4
ஓரம் ஒட்டாமல், நுரைத்து வரும் போது பார்த்து உடனே எடுத்து நெய் தடவி வைத்துள்ள தட்டில் சேர்க்கவும்.
- 5
ஐந்து நிமிடங்கள் கழித்து துண்டு போடவும். இப்போது சுவையான தேங்காய் பர்பி தயார்.
- 6
இது பாரம்பரிய இனிப்பு பலகாரம். எல்லோரும் விரும்பி செய்யக்கூடிய, சாப்பிடக்கூடியது. செய்வதும் சுலபம்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்