கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)

# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
கடல்பாசி அல்வா (Kadalpaasi halwa recipe in tamil)
# Arusuvai 1 கடல்பாசி நம் உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். கடல் பாசி அல்வாவின் சுவை மிகவும் நன்றாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
கடற்பாசியை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். மூன்று பாதாம், மூன்று முந்திரி, இரண்டு ஏலக்காயை பொடி செய்து வைக்கவும். அரை டம்ளர் சர்க்கரையை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஊறிய கடல்பாசி மூன்றாவது படத்தில் இருப்பது போல் இருக்கும்.
- 2
ஊறிய கடல் பாசியை அடுப்பில் வைத்து நன்கு கரையும் வரை கொதிக்கவிடவும். இப்பொழுது சர்க்கரை சேர்க்கவும்.3/4 டம்ளர் பால் எடுத்து வைக்கவும்.
- 3
சர்க்கரை கரைந்தவுடன் பால் சேர்க்கவும். இப்பொழுது பாதாம்,முந்திரி,ஏலக்காய் பொடியை சேர்க்கவும். ஒரு தட்டில் இரண்டு ஸ்பூன் நெய் தடவி வைக்கவும்.
- 4
இதில் கடல்பாசியை ஊற்றவும். நன்கு ஆறியவுடன் பீஸ் போட வேண்டும். சுவையான கடல்பாசி அல்வா தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்