மணக்க மணக்க முருங்கைப்பூ ரசம் (murungai poo Rasam Recipe in Tamil)
Ilavarasi @cook_20176603
மணக்க மணக்க முருங்கைப்பூ ரசம் (murungai poo Rasam Recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைப்பூவை சுத்தம் செய்து 1 டீஸ்பூன் எண்ணெயில் வதக்கி உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
- 2
தக்காளியை வேகவைத்து தோல்உரித்து அரைத்து கொள்ளவும்.
- 3
வறுத்து பொடிக்க தேவையான பொருட்களை நன்கு மனம் வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
- 4
புளியை ஊறவைத்து கரைத்து வடிகட்டி 3/4 லிட்டர் தண்ணீரில் கலந்து வைக்கவும்.
- 5
வாணலியில் எண்ணெய் ஊற்றி பெருங்காயம்,கடுகு,கருவேப்பிலை, வற்றல் சேர்த்து தாளிக்கவும்.
- 6
பின்னர் வறுத்து தூளாக்கிய பொடியை சேர்த்து வதக்கவும்.
பின்னர் தக்காளி விழுது சேர்த்து நன்கு வதக்கவும். - 7
முருங்கைப்பூ மஞ்சள்தூள், புளிகலந்த தண்ணீர் சேர்க்கவும்.நுரை சேர்ந்து வரும் பொழுது இறக்கவும்.
- 8
ரசம் ஊற்றும் பாத்திரத்தில் வெல்லதூள்,உப்பு, மல்லிதழை சேர்த்து ரசத்தை அதில் ஊற்றவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13214491



கமெண்ட் (2)