பிடி கருணை புளி குழம்பு

கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.
பிடி கருணை புளி குழம்பு
கருணைகிழங்கு அபரிமிதமான சத்துக்கள் உள்ளன. சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. மூல நோய்க்கு அருமருந்தாக பயன்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
கருணைக் கிழங்கை நன்றாக கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டு 3 விசில் விட்டு இறக்கி ஆற விட்டு சின்ன துண்டு துண்டாக நறுக்கி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு சீரகம் சோம்பு வெந்தயம் போட்டு சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் போட்டு கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 3
பின்னர் தக்காளி உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். மிளகாய்த்தூள் மிளகு தூள் மல்லி தூள் சேர்த்து வதக்கவும் பின்பு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அதில் நறுக்கிய கருணைகிழங்கு யும் சேர்த்து கொதிக்கவிடவும்.
- 4
நன்றாக கொதித்தவுடன் அதில் தேவையான அளவு புளிகரைசலை ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes















கமெண்ட்