சமையல் குறிப்புகள்
- 1
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடேறியதும் கடுகு பொழிந்து வந்தவுடன் பட்டை ஏலக்காய் கிராம்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை போட்டு வதக்கவும்
- 2
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 3
நன்கு வதங்கிய பின் தக்காளி சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள் சீரகப் பொடி கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து கிளறவும்.
- 4
நன்கு கிளறிய பின் வாணலியில் ஓரத்தில் ஒதுக்கி நடுவில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் 4 முட்டையை ஊற்றி சிறிது நேரம் வேக விட்டு மசாலாவுடன் நன்கு பிரட்டவும்
- 5
மசாலாவுடன் நன்கு பிரட்டி பின் சாதம் சேர்த்து ஒன்றோடு ஒன்றாக கிளறவும். சுவையான முட்டை சாதம் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13261234



கமெண்ட்