கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு

மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.
கிராமத்து கடவா கருவாட்டு குழம்பு
மண்பாத்திரத்தில் சமையல் செய்து தர ருசியாகவும் மணமாகவும் இருக்கும் இந்த கருவாட்டு குழம்பு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கருவாட்டை மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளவும். பிறகு ஒரு மண்பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சீரகம் சோம்பு வெந்தயம் போட்டு சிவந்ததும் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு கறிவேப்பிலை பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 2
பிறகு தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும. அதில் கருவாடு சேர்த்துக் கிளறி வதக்கவும். தேவையான உப்பு சேர்த்து கிளறவும். பிறகு மிளகாய் தூள் மல்லி தூள் மிளகு தூள் சேர்த்து வதக்கவும் அதில் தேவையான தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு.
- 3
ஊற வைத்து இருக்கும் புளிகரைசலை கரைத்து ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு அடுப்பை சிம்மில் வைத்து எண்ணெய் பிரியும் வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட்