#cookwithfriends பன்னீர் கிரேவி

நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...
#cookwithfriends பன்னீர் கிரேவி
நான் வீட்டிலே பன்னீர் செய்து கிரேவி தயாரிப்பேன் சற்று வித்யாசமாக...
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீர் மேல் மிளகாய் தூள், மஞ்சள் தூள்,உப்பு சிறிது சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு பேனில் 2 மே. கரண்டிஎண்ணெய் ஊற்றி பன்னீரை பொரித்து எடுக்கவும்.
- 3
அதே பேனில் வெங்காயம்,முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் 2 மே.கரண்டி,வெண்ணெய் 1 மே.கரண்டி சேர்த்து பட்டை,கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து வதக்கி வெங்காய,குடைமிளகாய் கண்டங்களை சேர்த்து வதக்கி அதனுடன் மிளகாய் தூள்,மல்லி தூள்,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.இதனுடன் வெங்காயம் அரைத்ததை சேர்த்து வதக்கவும்
- 5
வெங்காயம் நன்கு வதங்கிய பின் தக்காளி அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 6
நன்கு வதங்கிய பின் உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்த பின் பொரித்த பன்னீர் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கொதிக்க விட்டு கஸ்தூரி மித்தி சேர்த்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்