சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

சுலபமான மற்றும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.

சிம்பிள் வெஜிடபிள் பிரியாணி

சுலபமான மற்றும் சுவையான லஞ்ச் பாக்ஸ் ரெசிப்பி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  1. பாஸ்மதி அரிசி 2 கப்,
  2. தண்ணீர் 3 கப்,
  3. தயிர் 2 ஸ்பூன்,
  4. நெய் தேவையான அளவு,
  5. பெரிய வெங்காயம் 1,
  6. சிறியதக்காளி 2,
  7. பச்சை மிளகாய் 1,
  8. கேரட் நறுக்கியது,
  9. பீன்ஸ் நறுக்கியது,
  10. உருளைக்கிழங்கு நறுக்கியது,
  11. புதினா 1 கப்,
  12. மல்லி இலை கறிவேப்பிலை,
  13. தாளிக்க:
  14. எண்ணெய் தேவையான அளவு,
  15. பட்டை,
  16. பிரிஞ்சி இலை,
  17. நட்சத்திர சோம்பு,
  18. சோம்பு
  19. அரைக்க:
  20. இஞ்சி 2 துண்டு, பூண்டு 6, சோம்பு 1 ஸ்பூன், சீரகம் அரை ஸ்பூன்,
  21. புதினா ஒரு கப்,
  22. கிராம்பு-2, ஏலக்காய் 3, சிறிது பட்டை

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அரைக்க எடுத்து வைத்த பொருட்களை அரைத்துக் கொள்ளலாம்.

  3. 3

    பிறகு குக்கரில் எண்ணெய் காயவைத்து தாளிக்க வைத்த பொருட்களை போடவும்.

  4. 4

    வெங்காயம் பச்சை மிளகாய் காய்கறிகள் மற்றும் தக்காளி ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கல்லுப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    பின்னர் அரைத்த கலவையை சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்றாக வதக்கவும்.

  6. 6

    மிளகாய்த்தூள் மஞ்சள்தூள் சேர்த்து உப்பு சரிபார்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

  7. 7

    15 நிமிடங்கள் ஊற வைத்த பாசுமதி அரிசியை இதனுடன் சேர்த்து கலக்கவும்.

  8. 8

    ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர், ஆக 2 கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  9. 9

    பிறகு இரண்டு ஸ்பூன் தயிர் எடுத்து நன்றாக அடித்து இதனுடன் கலந்து விடவும்.

  10. 10

    தேவையான அளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து, குக்கரை மூடி 2 விசில் விடவும்.

  11. 11

    விசில் அடங்கியதும் சுவையான வெஜிடபிள் பிரியாணி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
அன்று

Similar Recipes