டிக்கர் பராத்தா(Tikker Paratha Recipe in Tamil)

#cookwithfriends
#santhichowdry
#maincourse
#cooksnap
என் தோழி சாந்தி வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் எனக்காக டிக்கர் பராத்தா செய்து கொடுத்தார்கள் மிகவும் சுவையாக வித்தியாசமான ரெசிபி யாகவும் இருந்தது. வெகு நாட்களாக நான் இதை செய்ய முயற்சி செய்தேன்.நண்பர்கள் தினத்தை முன்னிட்டு இந்த ரெசிபியை செய்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மூன்று வகையான மாவு மிளகாய் தூள் உப்பு கரம் மசாலாத்தூள் மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் நெய் இவற்றை நன்கு கலந்து வைக்கவும். பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை தக்காளி விழுது பச்சை மிளகாய் விழுது கரம் மசாலா தூள் ஆகியவற்றை மாவுடன் சேர்த்து நன்கு பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பிறகு மாவை சிறு சிறு உருண்டைகளாக நெய்யை தொட்டுக்கொண்டு உருட்டி ஒரு அரை மணி நேரம் ஊறவைக்கவும்.இப்பொழுது உருண்டைகளை சப்பாத்தி கல்லில் தேய்த்து தோசை தவாவில் போடவும் பிறகு அதன் மேல் பொடியாக நறுக்கிய தக்காளி மல்லி இலையை போட்டு தோசை கரண்டியால் நன்கு அமுக்கி விடவும்.
- 3
பராத்தா வட்டமாக வருவதற்கு மூடியினால் நன்கு மூடி பின் நல்ல வடிவத்திற்கு வந்தபின் தோசைக்கல்லில் போடவும்.
- 4
மிதமான சூட்டில் எண்ணெய் ஊற்றி இருபுறமும் நன்கு வேகவைத்து எடுக்கவும். டிக்கர் பரோட்டா ரெடி இதை வேறு ஒரு ப்ளேட்க்கு மாற்றி தயிர் வைத்து பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)