ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்

இது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும்.
ட்ரை ஃப்ரூட்ஸ் புலாவ்
இது வழக்கமான புலாவாக இல்லாமல் குங்குமப்பூ, பாதாம், வால்நட், முந்திரிப் பருப்பு சேர்த்து சமைக்கப் பட்டது. குங்குமப்பூவின் நிறமும், ட்ரை ஃப்ரூட்ஸின் சுவையும் புலாவின் தனித்துவம். ஒரு கிரேவியோடு சரியான காம்போவாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்மதி அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
கடாயில் ஒரு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, சீரகம், ஏலக்காய், கறுப்பு ஏலக்காய் தாளித்து சுக்குப் பொடி சேர்க்கவும்.
- 3
பின்னர் ஊறிய பாஸ்மதி அரிசியைச் சேர்த்துக் கிளறவும். இரண்டு சிட்டிகை குங்குமப்பூ சேர்க்கவும்.
- 4
இரண்டரை கப் தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைக்கவும்.
- 5
வெங்காயத்தை நறுக்கி, கடாயில் மூன்று மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து வதக்கவும். பிரவுன் நிறம் வரும் வரை வெங்காயத்தை வதக்கி தனியே எடுத்து வைக்கவும்.
- 6
கடாயில் இரண்டு மேசைக்கரண்டி நெய் ஊற்றி காய்ந்ததும் வால்நட் சேர்த்து வறுத்து எடுக்கவும். பின்னர் பாதாம், முந்திரிப் பருப்பு என்று தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
- 7
இந்நேரத்தில் புலாவ் வெந்திருக்கும். வெந்த புலாவை வேறு பாத்திரத்தில் மாற்றி வறுத்த வெங்காயம், மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் தூவி ஒரு கிரேவியுடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes


















கமெண்ட் (7)