காலிஃப்ளவர் மிளகு பொரியல்
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவரை சிறு பூக்களாக பிரித்துக் கொள்ளவும். அதனை மஞ்சள் தூள், உப்பு கலந்த சுடுநீரில் 10 நிமிடம் போட்டு வடிகட்டி வைக்கவும். பூச்சி எதுவும் இருந்தால் வந்து விடும்.
- 2
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். காலிஃப்ளவருடன்ன் இஞ்சிபூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தயிர், கடலை மாவு சேர்த்து பிசிறி வைக்கவும்.
- 3
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 4
வெங்காயம் வதங்கியதும் காலிஃப்ளவர் கலவையை சேர்த்து வதக்கவும்..
- 5
காலிஃப்ளவர் வெந்ததும் மிளகு தூள் சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒரு சேரபிரட்டி விட்டு 5 நிமிடம் வேக விடவும்.
- 6
எண்ணெய் பிரிந்து வரும் பொழுது அடுப்பை அணைக்கவும்.
சுவையான காலிப்ளவர் மிளகு பொரியல் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13330947













கமெண்ட்