மீன் பெப்பர் ஃப்ரை

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

மீன் பெப்பர் ஃப்ரை

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1/2கிலோ மீன்
  2. 3ஸ்பூன் மிளகாய் தூள்
  3. தேவையானஅளவு உப்பு
  4. 1ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. 3மேசைக்கரண்டி மிளகு தூள்
  6. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 1/2 எலுமிச்சை பழம்
  8. 2மேசைக்கரண்டி அரிசி மாவு
  9. 1/4கப் எண்ணெய்
  10. சிறிதளவுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு வானலில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது,2ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து கலந்து விட்டு மீனை கழுவி இதில் சேர்த்து மசாலா எல்லா இடங்களிலும் படும் படி கலந்து விடவும்.

  2. 2

    பிறகு எலுமிச்சை பழம் சாறு பிழிந்து நன்கு கலந்து விட்டு ஒரு தட்டில் தனி தனியே எடுத்து வைத்து குறைந்தது அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு சிறிய தட்டில் அரிசி மாவு, மிளகு தூள், சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும்.பிறகு மீன் ஃப்ரை செய்வதற்கு முன் இந்த தூளை மீன் மீது தூவி விடவும்.

  4. 4

    அடுப்பில் பேன் வைத்து எண்ணெய் ஊற்றி மிளகு தூள் தூவிய பக்கம் கீழ் பார்த்தவாறு போடவும்.பிறகு கீழ் பகுதி வெந்ததும் மேல் மிளகு கலந்த தூள் தூவி திருப்பி போடவும்.

  5. 5

    இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும் கடைசியில் சிறிதளவு கறிவேப்பிலை தூவி எடுத்து சூடாக பரிமாறவும்.சூப்பரான மொறு மொறு மிளகு சுவையில் மீன் ஃப்ரை தயார். நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes