வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் (Vaalakaai Urulai cutletrecipe in tamil)
வாழைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது .உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் அதனால் இதை இரண்டையும் சேர்த்து கட்லட் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. இந்த கட்லெட்டை எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டனர். அதனால் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காய் ஒரு உருளைக்கிழங்கை எடுத்துக்கொள்ள வேண்டும். அதை குக்கரில் 2 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். வதக்கு வதற்கு தேவையான பொருளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
- 2
வேக வைத்த வாழைக்காய் உருளைக்கிழங்கு நன்றாக மசித்து வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணை விட்டு ஒரு ஸ்பூன் பெருஞ்சீரகம், நறுக்கி வைத்த வெங்காயம், அதனுடன் இஞ்சி பூண்டு, பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து வைத்து சேர்க்கவும். பிறகு அதை நன்றாக வதக்கவும் பிறகு அதனுடன் கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் 2ஸ்பூன் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- 3
பிறகு அதனுடன் மசித்த வாழைக்காய் உருளைக்கிழங்கை சேர்த்து வதக்க வேண்டும். லேசாக வதங்கியதும் அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.லேசாக சூடு ஆறியதும் 50 கிராம் பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, சோள மாவு தேவையான அளவு உப்பு இவற்றை ஒன்றாக சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
- 4
ஒரு கப்பில் மூன்று ஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீர் விட்டு கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது பிசைந்து வைத்துள்ளதை எடுத்து உருண்டையாக உருட்டி லேசாகத் தட்டி கொள்ளவும். நமக்கு தேவையான வடிவத்தில் செய்து கொள்ளலாம்.இப்பொழுது அதை எடுத்து கரைத்து வைத்த கான்பிளவர் மாவில் முக்க வேண்டும்.பிறகு அதை ரஸ்க் தூளில் பிரட்டிக் கொள்ள வேண்டும்.
- 5
அடுப்பில் வாணலியில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் விட்டு அடுப்பை மீடியமாக வைத்து கொள்ளவும்.என்னை காய்ந்த உடன் கட்லெட் துண்டுகளை எண்ணையில் பொரித்து எடுக்கவும்.திருப்பி விட்டு பொன்னிறமாக வரவும் எடுத்துவிடவேண்டும். இப்பொழுது சுவையான வாழைக்காய் உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
- 6
மிகவும் ருசியான கட்லெட் தயார்.இதன் சுவை மிகவும் அருமையாக இருந்தது.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்