சமையல் குறிப்புகள்
- 1
ரவை தயிர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு 15 நிமிடங்கள் அப்படியே மூடவும்
- 2
மேலே குறிப்பிட்ட காய்கறிகள் அனைத்தையும் சிறியதாக நறுக்கி கொள்ளவும்
- 3
15 நிமிடங்கள் கழித்து ரவை கலவை எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து ஊத்தாப்பம் பதத்திற்கு கிளறவும்
- 4
அடுப்பில் தோசை கல்லை வைத்து சூடானதும் அதில் ரவை கலவை எடுத்து தோசை போல் ஊற்றவும் சிறிது கனமாக ஊற்றவும்
- 5
அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் மேலே தூவி விடவும்
- 6
ஊத்தாப்பம் சுற்றியும் மேலேயும் தேவையான அளவு நெய் விடவும்.
- 7
ஒரு புறம் சிவந்த உடன் திருப்ப வேண்டும்....
- 8
மறுபுறம் சிவந்த உடன் எடுத்து சூடாக பரிமாறவும்
- 9
சுவையான ரவை ஊத்தாப்பம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13668552











கமெண்ட்