பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)

Belji Christo @cook_20603733
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீர்க்கங்காய் தோல் நீக்கி, சின்ன துண்டுகளாக வெட்டி வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு மற்றும் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு வெட்டி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பீர்க்கங்காய் தண்ணி விடுற வரைக்கும் நன்கு வதக்கவும். பின்பு மூடி வைத்து நன்கு வேக வைக்கவும். வெந்தபின் தேங்காய் சேர்த்து கலந்துவிட்டு பின்பு கலவை ஆறவைக்கவும்.
- 3
ஆறியபின் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும். இப்போ ஒரு சின்ன பான் எடுத்து அதுல என்னை ஊத்தி கடுகு, உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும். இப்ப ரொம்ப சத்தான பீர்க்கங்காய் சட்னி தயார். தோசை, இட்லி மற்றும் சாதம் கூட சாப்பிடலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13780196









கமெண்ட்