குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

குஜராத்தி லாப்சி / broken wheat halwa (Kujarathi laabsi recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2-4 பரிமாறுவது
  1. 1/2 கப் சம்பா ரவை
  2. 1/2 கப் சர்க்கரை
  3. 3-4 டேபிள்ஸ்பூன் நெய்
  4. 2 கப் தண்ணீர்
  5. 2 டேபிள்ஸ்பூன் நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    வாணலியில் நெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் குறைந்த தீயில் சம்பா ரவையை சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்

  2. 2

    ரவை நன்றாக வறுபட்டு படத்தில் காட்டியவாறு பொரிந்து வரவேண்டும்

  3. 3

    அதன் பிறகு இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும் அவ்வப்போது அடிபிடிக்காமல் இருக்க கிளறிக் கொள்ளவும் தண்ணீர் வற்றி வரும் வரை கொதிக்க வைக்கவும்

  4. 4

    தண்ணீர் வற்றி வந்த பிறகு சர்க்கரை, ஏலக்காய்த்தூள் சேர்த்து கை விடாமல் நன்றாக கிளறவும்

  5. 5

    சம்பா ரவை வாணலியில் ஒட்டாமல் அல்வா போல் சுருண்டு வரும் அப்பொழுது நறுக்கிய பாதாம் முந்திரி பிஸ்தாவை சேர்க்கவும்

  6. 6

    2 நிமிடம் குறைந்த தீயில் வைத்து பிறகு மிதமான தீயில் 2 நிமிடம் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.. சம்பா ரவை, வாணலியில் ஒட்டாமல் நெய் வெளியே வர ஆரம்பிக்கும் பொழுது அடுப்பை அணைத்து பரிமாறவும்

  7. 7

    சுவையான குஜராத்தி லாப்சி தயார் 🤩🤩🤩 பரிமாறும் பொழுது நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes