கல்யாண சேனை வறுவல் (Senai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சேனைக் கிழங்கை சுத்தம் செய்து சதுரமாக வெட்டிக் கொள்ளவும். கழுவி ஒரு குக்கரில் சேர்த்து, உப்பு மஞ்சள் தூள் புளி தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். இதனை மூடி ஒரு விசில் வரை வேக விடவும்.
- 2
வெந்தபின் தண்ணீரை வடித்துக்கொள்ளவும். புளியை எடுத்து விடவும்.
- 3
வாணலியில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் சேர்த்து, சேனை கிழங்கு நன்கு ஆறியபின் பொரித்து எடுக்கவும்.
- 4
பட்டை, கிராம்பு, இஞ்சி, பூண்டு, வரமிளகாய் இவற்றை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். அதன் பின் ஒரு துண்டு தேங்காயை நறுக்கி கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 5
இறுதியில் சின்ன வெங்காயத்தை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அதே வாணலியில் பொரித்த எண்ணெயை எடுத்து விட்டு தேங்காய் எண்ணெய் சேர்த்து கருவேப்பிலை போட்டு தாளிக்கவும். பிறகு அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும்.
- 6
மசாலா பச்சை வாடை போன பின் வேக வைத்த சேனைக்கிழங்கை சேர்க்கவும். கூடவே தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு ரோஸ்ட் செய்யவும்.
- 7
வேக வைத்து வடித்த தண்ணீரில் இருந்து சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு சேனை கிழங்கு வேகும் வரை சமைக்கவும். தண்ணீர் நன்கு வற்றியபின் ரோஸ்ட் போல தயார் செய்து பரிமாறவும். அலங்கரிக்க மல்லி இலைகளை சேர்த்துக்கொள்ளலாம்.
- 8
அருமையான கல்யாண விசேஷங்களில் சாப்பிடக்கூடிய சேனைக்கிழங்கு வறுவல் தயார்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட்