Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)

#flour
Maida
Chicken Hot Dog சிக்கன் ஹாட் டாக் (Chicken hot dog recipe in tamil)
#flour
Maida
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் Hot dog bun செய்முறையை பார்ப்போம்.
- 2
ஒரு கிண்ணத்தில் ஈஸ்ட், சர்க்கரை, வெதுவெதுப்பான பால் சேர்த்து கலந்து 5 நிமிடம் மூடி விடவும்.
- 3
ஒரு அகன்ற பாத்திரத்தில் மைதா,உருக்கிய வெண்ணெய்,முட்டை,உப்பு,ஈஸ்ட் கலவை சேர்த்து நன்றாக கலக்கவும். நன்றாக 10 நிமிடம் கையால் பிசைந்து அரைமணி நேரம் ஊற விடவும்.
- 4
ஒரு தூய்மையான இடத்தில் மைதாவை தூவி ஊறிய மைதா மாவை அதன் மேல் போட்டு நன்றாக கையால் பிசைந்து bun shape இல் உருட்டி அவன் ப்ளேட்டில் வைக்கவும்
- 5
அதன் மீது முட்டை கலவையை தேய்க்கவும். பின் பிரிஹீட் செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 10 முதல் 15 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்
- 6
Hot dog bun ரெடி
- 7
மயோனைஸ் (mayonnaise)செய்முறை
- 8
ஒரு அகன்ற பாத்திரத்தில் முட்டையின் மஞ்சள் கருவை சேர்த்து நன்றாக அடிக்கவும்.
- 9
கடுகுப் பொடி சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும். எண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடிக்கவும். என்னை ஒரே தடவையில் சேர்த்தால் நீர்த்துவிடும்
- 10
பத்து நிமிடம் நன்றாக அடித்த பின்பு இதனுடன் வினிகர்,எலுமிச்சை சாறு, உப்பு,மிளகுதூள் சேர்த்து மறுபடியும் நன்றாக மிக்ஸ் செய்யவும்.
- 11
எலுமிச்சை பழச்சாறு சேர்த்த பின்பு கலவை நன்றாக வெண்மையாக வந்துவிடும். மறுபடியும் எண்ணெய் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடிக்கவும்.
- 12
மயோனைஸ் ரெடி
- 13
கொத்திய சிக்கனை நன்றாக கழுவி ஒரு ஈரத்துணியால் துடைத்து மிக்ஸி ஜாரில் போட்டு பேஸ்ட் பண்ணவும்.
- 14
சிக்கன் சாசேஜ்(sausages) செய்முறை
- 15
சிக்கன் பேஸ்டுடன் உப்பு, மிளகாய்த்தூள்,மஞ்சள்,மிளகுத்தூள், கெட்சப்,இஞ்சி பூண்டு விழுது,சோயா சாஸ்,வினிகர் சேர்த்து நன்றாக கலக்கவும்.
- 16
சிக்கன் கலவையை நன்றாக உருட்டி அலுமினிய பேப்பரில் நடுவில் வைத்து நன்றாக இறுக்கி சுருட்டி இரண்டு பக்கமும் முறுக்கிக் கொள்ளவும்
- 17
கடாயில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் சிக்கன் Hot dog ஐ உள்ளே போட்டு பத்து நிமிடம் வேகவைத்து எடுக்கவும்
- 18
வேக வைத்த சிக்கன் சாசேஜ் நன்றாக ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடவும்.ஒரு இரவு முழுவதும் ஃப்ரிட்ஜில் வைத்து எடுக்கவும். சிக்கன் sausage ரெடி
- 19
இனி கடைசியாக சிக்கன் ஹாட் டாக் செய்வதைப் பார்ப்போம்
- 20
Zucchini பொடியாக கட் செய்து அதனுடன் உப்பு சேர்த்து ஒரு அரை மணி நேரம் ஊறவைத்து தண்ணீர் நன்றாக வந்ததும் வடிகட்டவும்
- 21
கடாயில் பொடியாக நறுக்கிய zucchini,பெரிய வெங்காயம்,சர்க்கரை, மிளகுத்தூள், வினிகர் சேர்த்து நன்றாகfry பண்ணவும்.
- 22
ஒரு தவாவில் சிறிது எண்ணெய் விட்டு நாம் செய்து வைத்துள்ள சிக்கன் சாசேஜ் நன்றாக ப்ரை பண்ணி எடுக்கவும்
- 23
நாம் செய்து வைத்துள்ள hot dog bun எடுத்து நடுவில் இரண்டாக வெட்டவும்
- 24
பண்ணின் நடுவில்ஃப்ரை செய்த zucchini வைத்து மயோனைஸ் வைத்துchicken sausage வைத்து அதன்மேல் மயோனைஸ் போட்டு பரிமாறவும்
- 25
Chicken hot dog ரெடி
- 26
சுவையான hot dog வீட்டிலேயே சமைத்து சாப்பிடலாம்.
- 27
பன் மற்றும் மயோனைஸ் மற்றும் சிக்கன் சாசேஜ் இந்த மூன்றும் இருந்தால் சிக்கன் hot dog செய்வது மிகவும் சுலபம்.
Keywords
Similar Recipes
More Recipes


















































கமெண்ட்