பிஸ்தா முந்திரி ladoo (Pistachio Cashew ladoo recipe in tamil)

பிஸ்தா முந்திரி ladoo (Pistachio Cashew ladoo recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முந்திரிப் பருப்பை வெறும் வாணலில் பொன்னிறமாக வறுத்து நன்கு ஆற வைத்து மிக்ஸியில் நைசாகப் பொடித்துக் கொள்ளவும்.
- 2
பிஸ்தா வையும் அதேபோல் மிதமான தீயில் வறுத்து ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் அரை கப் தண்ணீருடன் சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு கம்பிப் பாகு ரெடி பண்ணவும் பின்பு அதில் பொடித்து வைத்துள்ள முந்திரி பவுடரை சேர்த்து கைவிடாமல் கிளறிக் கொண்டே வரவும் அதனுடன் ஏலக்காய்த்தூள் சிறிது நெய் சேர்த்து திரண்டு வரும் பொழுது அடுப்பை அணைத்து வேறொரு பாத்திரத்தில் உடனடியாக மாற்றவும். தேவையெனில் சிறிது பால் சேர்த்துக் கொள்ளலாம்
- 4
அடுத்து அதேபோல் அழைக்கப் சர்க்கரையுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பாகு தயார் செய்து அதில் பொரித்து வைத்துள்ள இந்த பவுடரை சேர்த்து அதனுடன் ஏலக்காய்த்தூள் நெய் சேர்த்து கைவிடாமல் கலந்து கெட்டியானதும் அடுப்பை அணைத்து வேறு ஒரு பாத்திரத்தில் உடனடியாக மாற்றவும்.
- 5
ரெடி செய்து வைத்துள்ள முந்திரி மற்றும் பிஸ்தா பருப்பில் செய்து வைத்துள்ள அல்வாவை உங்கள் விருப்பத்திற்கேற்ற வடிவில் உருட்டி பரிமாறவும்.
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்