முந்திரிக் கொத்து

நெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர்.

சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறை சுத்தம் செய்து நன்கு வறுத்து ஆறவைத்து கரகரப்பாகப் பொடிக்கவும்.
- 2
பொடித்த மாவில் தேங்காய்த் துருவலை பொன்னிறமாக வறுத்து சேர்க்கவும்.
- 3
சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி சேர்த்துக் கலந்து கொள்ளவும். வெல்லத்தை சிறு கம்பிப் பாகு பதத்தில் எடுத்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்க்கவும்.
- 4
மாவோடு வெல்லப் பாகை நன்கு கலந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
- 5
சிறு சிறு உருண்டைகளாக சுமார் 20 -22 உருண்டைகள் பிடிக்கலாம். உருண்டைகளை அரை மணி நேரம் உலர வைக்க வேண்டும்.
- 6
ஒரு பவுலில் அரை கப் அரிசி மாவு, ஒரு மேசைக்கரண்டி மைதா, சிட்டிகை உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து தண்ணீர் சேர்த்து தோசை மாவை விட சற்று தளரக் கரைத்துக் கொள்ளவும்.
- 7
அரை மணி நேரம் கழித்து மூன்று மூன்று உருண்டைகளாக மாவில் தோய்த்துக் காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
- 8
இரண்டு நிமிடம் வெந்ததும் மறுபுறம் திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.
- 9
சுவையான, ஆரோக்கியமான முந்திரிக் கொத்து தயார்.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (2)