ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)

#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.
ஹோட்டல் ஸ்டைல் ஹைதராபாதி சிக்கன் கறி (Hyderabad chicken curry recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் ஹைதராபாத் என்ற வார்த்தையை வைத்து இந்த ரெசிபி செய்து இருக்கிறேன் வாங்க செய்முறையை காணலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் சுத்தம் செய்த சிக்கனை சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் தனியாத்தூள் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 2 பச்சை மிளகாய் பச்சை மிளகாயை நடுவில் கீறி சேர்த்துக் கொள்ளவும்.
- 2
1 டீஸ்பூன் சீரகத்தூள் டீஸ்பூன் கரம்மசாலா தூள் மற்றும் அரை டீஸ்பூன் அளவு மஞ்சள் தூள் அதனுடன் கெட்டித் தயிர் ஒரு கப் அளவு சேர்த்து நன்றாக கலந்து ஒரு 20 நிமிடம் அப்படியே விட்டு விட வேண்டும்.
- 3
20 நிமிடம் பிறகு இப்பொழுது அடுப்பை பற்ற வைத்து கடாயை வைக்கவும் அதில் தேவையான அளவு எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்தவுடன் முழு சீரகம் மற்றும் பட்டை லவங்கம் கிராம்பு பிரியாணி இலை போன்ற தரமஸ்தல பாக்கெட்டை எடுத்து அதில் போட வேண்டும்.
- 4
நறுக்கி வைத்திருக்கும் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.நன்கு வதங்கிய இருக்கும் பொழுது நன்றாக கோல்டன் பிரவுன் ஆகும் சமயத்தில் நாம் ஊறவைத்து வைத்திருக்கும் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 5
சிக்கன் சேர்த்து சிறிது நேரத்துக்கெல்லாம் நன்றாக கொதிக்க ஆரம்பிக்கும் போது அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து மூடி போட்டு ஒரு 15 நிமிடம் நன்கு வேக வைக்கவும்
- 6
15 நிமிடம் கழித்து பார்த்தால் சுவையான ஹைதராபாதி ஹோட்டல் ஸ்டைல் சிக்கன் கறி தயாராகி விட்டது மிகவும் சுலபமானது மற்றும் சுவையானது ஒருமுறை செய்து பாருங்கள் இறக்குவதற்கு முன்பு கொத்தமல்லியைத் தூவி இறக்க வேண்டும் அவ்வளவுதான் நன்றி
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்