தட்டப்பயறு புளிக்குழம்பு (Thattapayaru pulikulambu recipe in tamil)

#jan1
பயறுவகைகள் அனைத்திலுமே புரோட்டீன் சத்துக்கள் இருக்கும் புளிக் குழம்பில் நாம் காய்கறிகளை சேர்த்தால் பெரும்பாலான குழந்தைகள் சாப்பிடுவதில்லை பயிறு வகைகளை சேர்த்து செய்தால் அதன் சுவை நன்றாக இருக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
தட்டப்பயிறு வெறும் வாணலியில் 3 நிமிடம் வறுத்து பின்னர் குக்கரில் 5 அல்லது 7 விசில் வரும் வரை வேக விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு குழி கரண்டி அளவு எண்ணெய் ஊற்றி சோம்பு வெந்தயம் ஆகியவற்றை சேர்க்கவும் இரண்டும் சிவந்தவுடன் கருவேப்பிள்ளை தக்காளி வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாகும் வரை நன்றாக வதக்கிக் கொள்ளவும். பின்னர் அதில் வேக வைத்த தட்டை பயிரை வேக வைத்த நீருடன் சேர்க்கவும்.
- 3
இதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து மூன்று நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் புளியை நன்றாக கரைத்து அதில் சேர்த்து தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து அதில் கலந்து கொள்ளவும்.அடுப்பை சிறிய தீயில் வைத்து 5 நிமிடங்கள் கொதிக்க விடவும். பின்னர் பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- வரகு அரிசி பாசிப்பருப்பு பொங்கல் (Varagu arisi pongal recipe in tamil)
- கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
- முருங்கை கீரை கூட்டு (Murunkai keerai kootu recipe in tamil)
- அரிசி பருப்பு சாதம் (Arisi paruppu satham recipe in tamil)
- தண்டுக் கீரை கடையல் (Thandu keerai kadaiyal recipe in tamil)

கமெண்ட்