சீஸ் ஆம்லெட் (Cheese omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
இதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லி இலை, இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், தேவைக்கு உப்பு இவை அனைத்தையும் சேர்த்து நுரை வரும் வரைக்கும் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 3
ஒரு தோசைக் கல் அடுப்பில் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் அடித்து வைத்திருக்கும் முட்டைக் கலவையை தோசைக் கல்லில் ஊற்றி பரவி விடவும்.
- 4
மீடியம் ஃப்ளேமில் வேக விடவும்.
- 5
முட்டை ஒரு பகுதி வெந்ததும்,மறு பகுதியை
மறித்துப் போடவும். - 6
இரண்டு பக்கமும் வெந்து வரும் போது ஆம்லெட்டின்
மீது தேவையான அளவு சீஸ் துருவலை தூவி கொடுக்கவும். - 7
ஏழு எட்டு செகன்ட் அப்படியே வேக விடவும்.
- 8
அதன் பிறகு ஆம்லெட்டை அப்படியே பாதியாக மடித்து எடுத்து தட்டிற்கு
மாற்றவும். - 9
சூப்பரான யெம்மியான சீஸ் ஆம்லெட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14437650












கமெண்ட்