தேங்காய் ஆம்லெட் (Thengai Omelette Recipe in TAmil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றவும்.
- 2
ஒரு சிறிய பவுளில் மிளகாய் தூள் சேர்த்து அதில் மூன்று டேபிள் ஸ்பூன் தண்ணீரும் தேவைக்கு உப்பும் சேர்த்து நன்றாக கலக்கி வைக்கவும்.
- 3
உடைத்து ஊற்றிய முட்டையுடன் இந்த மிளகாய் தூள் கலக்கியதை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
இதனுடன் தேங்காய் துருவல், நறுக்கிய வெங்காயம் இரண்டையும் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணி வைக்கவும்.
- 5
ஒரு தோசைக் கல் அடுப்பில் வைத்து அதில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை மிக்ஸை ஊற்றி நன்றாக பரத்திக் கொடுக்கவும்.
- 6
ஒரு மூடி வைத்து மூடி சிறிய தீயில் இரண்டு நிமிடம் வேக விடவும்.
- 7
இரண்டு நிமிடம் கழித்து மூடியைத் திறந்து மறித்துப் போடவும்.
- 8
ஆம்லெட்டை இரண்டு நிமிடம் சிறிய தீயில் வேக வைத்து எடுக்கவும். வித்தியாசமான சுவையில்
தேங்காய் ஆம்லெட் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14609680
















கமெண்ட்