ரசமலாய்(rasmalai)#Wd

மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன்.
ரசமலாய்(rasmalai)#Wd
மகளிர் தினத்திற்காக எங்கள் வீட்டில் இருக்கும் மகள் மருமகள் ,பேத்தி களுக்காக இந்த ஸ்வீட்டை டெடிகேட் செய்கிறேன்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு லிட்டர் பாலை அடுப்பிலேற்றி பால் பொங்கியதும் வினிகரை ஊற்றி பாலை திரிய விடவும் துணியில் வடிகட்டி ரன்னிங் வாட்டரில் கழுவி தண்ணீர் இல்லாமல் இறுக்கி பிழியவும்.
- 2
வடிகட்டிய திரிந்த பாலை தட்டில் கொட்டி கையால் அழுத்தி பிசையவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு வந்ததும் படத்தில் காட்டியவாறு வட்டமாக தட்டி வைத்துக் கொள்ளவும்
- 3
அகலமான பாத்திரத்தில் இருநூறு கிராம் சர்க்கரையை போட்டு 400 கிராம் தண்ணீர் ஊற்றி அடுப்பிலேற்றி கொதிக்கவிடவும் அடுப்பை சிம்மில் வைத்து தட்டி வைத்துள்ள ரசமலாய் அதில் போட்டு பத்து நிமிடம் வேகவிடவும் வெந்து உப்பலாக வந்ததும் தனியாக எடுத்து வைக்கவும் மீதமுள்ள அரை லிட்டர் பாலை அடுப்பில் ஏற்றி காய்ச்சி மீதமுள்ள சர்க்கரையை போட்டு அரை ஸ்பூன் கான்பிளவர் மாவு நீரில் கரைத்து பாலில் சேர்க்கவும் சிறிது கெட்டியாக வந்ததும் குங்குமப்பூ தூள் செய்த பாதாம் சேர்த்து அத்துடன் வேகவைத்த ரசமலாய் சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 4
சூடு ஆறியதும் பிரிட்ஜில் வைத்து பரிமாறவும் சுவையான ரசமலாய் தயார் நீங்கள் செய்து சுவையுங்கள்
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட் (2)