சுலபமான காளான் தம் பிரியாணி
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் நெய் மற்றும் நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை வகைகள், வெங்காயம், இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து அரைத்த கலவை,புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்
- 2
பின் புதினா இலைகளை சேர்த்து வதக்ககியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்
- 3
தக்காளி வதங்கியதும் தீயை சிறிதாக்கி சோம்பு தூள், சீராக தூள், மிளகு தூள், கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கி பிறகு கெட்டி தயிர் சேர்த்து வதக்கவும்
- 4
இறுதியில் காளான் சேர்த்து2 நிமிடம் வதக்கவும்
- 5
15 நிமிடம் ஊற வைத்த 2 கப் பாஸ்மதி அரிசி 3 1/2 கப் தண்ணீர்,தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 6
கொதிக்க ஆரம்பிக்கும் போது புதினா இலைகள்,குங்கும பூ ஊற வைத்த தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து மூடி வைத்து10 நிமிடம் லேசான தீயில் வேக விடவும்
- 7
10 நிமிடம் கழித்து பார்த்தால் உதிரி உதிரியாக காளான் பிரியாணி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14710279

























கமெண்ட்