வாழைப்பழ பான் கேக்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பௌலில் ஐந்து முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு வாழைப்பழம் மற்றும் சர்க்கரையை மிக்ஸியில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து அதை முட்டையுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 3
அதன்பிறகு கலந்த மாவில் வெனிலா எசன்ஸ் மற்றும் ஆப்பசோடா சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 4
பிறகு இரண்டு கப் கோதுமை மாவை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். மாவு கெட்டியாக இருந்தால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
- 5
அதன் பிறகு மாவை மூடி வைத்து அரை மணி நேரம் வைக்க வேண்டும்.
- 6
பிறகு ஒரு பானில் ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்ற வேண்டும். சிறிதளவு நெய் சேர்க்க வேண்டும்.
- 7
ஒரு புறம் நன்கு வெந்தவுடன் மறுபுறம் திருப்பி போட வேண்டும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் ஒரு ப்ளேட்டில் மாற்றி அதன் மேல் சிறிதளவு தேன் ஊற்ற வேண்டும்.
- 8
மிகவும் சுவையான வாழைப்பழ பான் கேக் சுலபமாக தயாராகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes


























கமெண்ட் (5)