சீரகசம்பா வெண்பொங்கல் கோதுமை சமோசா
சமையல் குறிப்புகள்
- 1
இதற்கு தேவையான ஒரு கப் சீரக சம்பா அரிசி அரை கப் பருப்பு ஆகியவற்றை நன்றாக சுத்தம் செய்து ஊற வைக்க வேண்டும். தேவையான பச்சைமிளகாய் இஞ்சி சிறிது சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
- 2
இப்பொழுது குக்கரில் சிறிதளவு வெண்ணெய் சேர்க்க வேண்டும் பின்பு அதோட அரை ஸ்பூன் சீரகம் அரை ஸ்பூன் மிளகு சேர்க்கவேண்டும்.
- 3
நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சியை சேர்க்க வேண்டும் பின்பு ஊற வைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் சிரிப்ப அதோடு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளவும். இப்பொழுது ஐந்து விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கோதுமை மாவு சேர்க்கவேண்டும் அதோடு தேவையான உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைக்கவும்.
- 5
ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி வைத்திருக்கும் பெரிய வெங்காயம் கேரட் மற்றும் வேகவைத்த வைத்திருக்கும் உருளைக்கிழங்கை சேர்த்து அதோடு ஒரு ஸ்பூன் கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்
- 6
இப்பொழுது சப்பாத்தி மாவை நன்றாக தேய்த்து எடுத்து அதை சமோசா அச்சில் வைக்கவேண்டும் பின்பு அதில் வதக்கி வைத்திருக்கும் மசாலாவை அதனுள் வைத்து எடுக்க வேண்டும்.
- 7
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்க வேண்டும் எண்ணை காய்ந்ததும் அதில் சமோசாவை சேர்த்து பொரித்து எடுக்க வேண்டும்.
- 8
சுவையான மற்றும் சத்தான கோதுமை சமோசா சீரகசம்பா வெண்பொங்கல் ரெடி. நன்றி
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்