வெஜ் புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை ஒரு 20 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேப்ஸிகத்தை பொடியாக நறுக்கவும்
- 3
மசாலாவிற்கு தேவையான பொருட்களை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து எடுக்கவும்.
- 4
குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்கவும்.
- 5
அதன் பின் முந்திரிப்பருப்பு, கருவேப்பில்லை, பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், பட்டை துண்டு சேர்த்து வதக்கவும்.
- 6
பின்பு தக்காளி, வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த மசாலா சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதங்கியதும் நறுக்கிய காரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, கேப்ஸிகத்தை சேர்க்கவும்.
- 8
தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி, புதினா சேர்க்கவும்.
- 9
அதன் பின் 2 பங்கு தண்ணீர், அரிசி சேர்த்து கிளறி 2 விசில் வரும் வரை வேக வைத்து விசில் அடங்கிய பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14829805




















கமெண்ட்