எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு

#everyday2
ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம்
எலும்பு மற்றும் கத்திரிக்காய் கறி குழம்பு
#everyday2
ஆட்டு எலும்புடன் கத்திரிக்காய் வைத்து மிக சுலபமான முறையில் குழம்பு செய்யலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு குக்கரில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு கடல்பாசி சேர்த்து நன்றாக வதக்கவும்
- 2
பின்பு தேவையான அளவு வெங்காயத்தை நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும் தக்காளி மற்றும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். தேவையான அளவு மட்டன் எலும்பை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவும்
- 3
தக்காளி வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் மட்டன் எலும்பு சேர்த்து பிரட்டவும், சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்
- 4
தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 விசில் விடவும். எலும்பு நன்றாக வேக வில்லை என்றால் கூடுதலாக இரண்டு விசில் விடவும்
- 5
தேவையான அளவு கத்தரிக்காயை முட்டை சைஸில் படத்தில் காட்டியவாறு நறுக்கிக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி கத்திரிக்காயை லேசாக வதக்கவும்
- 6
பின்பு வேக வைத்து எடுத்துள்ள மட்டனை சேர்த்து கொள்ளவும். ஒரு மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தேங்காய் கசகசா முந்திரிப்பருப்பு சேர்த்து அரைத்து கத்திரிக்காய் மற்றும் மட்டனுடன் சேர்த்து காரத்திற்கு ஏற்ப குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
- 7
தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும் இப்பொழுது சுவையான கத்திரிக்காய் மற்றும் மட்டன் குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes






















கமெண்ட்