மதுரை மட்டன் கறி தோசை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து வெங்காயத்தை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு பச்சைமிளகாய் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் சிறிதளவு கறிவேப்பிலை சேர்த்து கொள்ள வேண்டும்.
- 2
பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதனுடன் தக்காளி மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 3
பிறகு மிளகாய்த்தூள், மட்டன், உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
- 4
அதன் பிறகு மல்லி தூள், சோம்பு தூள், சீரகத்தூள், கரம் மசாலா சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 5
கறி வேகும் அளவிற்கு சிறிதளவு தண்ணீர் சேர்த்து கறி வேகும் வரை வைக்க வேண்டும்.
- 6
இறுதியாக மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லித் தழை தூவி நன்கு கிளறி விட வேண்டும்.கரி தோசைக்கு தேவையான கறி தயாராகிவிட்டது.
- 7
ஒரு தோசை கல்லில் ஒரு கரண்டி தோசை மாவு ஊற்றி கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு முட்டையை அடித்து ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு தயார் செய்து வைத்துள்ள கிரேவியை மாவு மீது வைத்து தோசையை சுற்றி நல்லெண்ணெய் சிறிதளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 8
ஒரு புறம் நன்கு வெந்தபிறகு மறுபுறம் திருப்பி போட வேண்டும். இருபுறமும் நன்கு வெந்தபிறகு ஒரு ப்ளேட்டில் வைத்து பரிமார வேண்டும்.
- 9
மட்டன் கறி தோசை மதுரையில் இரவு நேரங்களில் சாப்பிட மிகவும் பிரபலமான ஒரு உணவு. இனி இதை நம் வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes



























கமெண்ட்