இறால் கபாப்
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுலில் இறால் உடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சீரகத்தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 2
அதன் பிறகு அதனுடன் சோம்பு தூள், சோள மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ள வேண்டும்.
- 3
பிறகு தேவையான அளவு உப்பு, தேவைப்பட்டால் கலர் பொடி மற்றும் கருவேப்பிலையை இரண்டாக கிள்ளி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- 4
சேர்த்த அனைத்தையும் நன்கு கலந்துவிட வேண்டும். பிறகு எலுமிச்சை சாறு சிறிதளவு பிழிந்து நன்கு பிசைந்து கலந்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
- 5
அரை மணி நேரம் கழித்து ஒரு பானில் எண்ணையை நன்கு சூடு செய்து அதில் கலந்து வைத்துள்ள இறாலை போட்டு இரண்டு புறமும் நன்கு சிவக்க பிரை செய்து எடுக்க வேண்டும்.
- 6
அருமையான சுவையில் பிரான் கபாப் சுலபமாக தயாராகிவிட்டது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14960739




















கமெண்ட் (2)