மல்டி க்ரேய்ன் அடை தோசை
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி பருப்பு நன்றாக கழுவி 2 மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
ஊறிய அரிசி பருப்பை கிரைண்டரில் போட்டு கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும்
- 3
மிக்ஸியில் சோம்பு காய்ந்த மிளகாய் பூண்டை தோலுடன் சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும் அரைத்த அரிசி பருப்பு மாவுடன் சேர்த்து ஒரு ஓட்டு ஓட்டி வழித்தெடுக்கவும்
- 4
அடுப்பில் கடாயை வைத்து ஒரு குழிக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து சீரகம் பெருங்காயத் தூள் தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 5
வதக்கிய வெங்காயத்தை அரைத்த மாவுடன் சேர்த்து மஞ்சத்தூள் முருங்கைக் கீரை கொத்தமல்லி கறிவேப்பிலை தேங்காய்த் துருவல் தேவையான உப்பு சேர்த்து மாவை நன்றாக கலக்கவும்
- 6
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும் மாவை ஊற்றி கரண்டியால் தோசையாக வார்க்கவும் எண்ணெய் ஊற்றி இரண்டு புறமும் நன்றாக வேக விட்டு முறுகலாக எடுக்கவும் மல்டிக்ரேயின் அடை தோசை ரெடி தேங்காய் சட்னி அல்லது அவியலுடன் பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes



















கமெண்ட்