எலுமிச்சை சாதம் (Lemon rice) 🍋
சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை நன்கு கழுவி பத்து நிமிடங்கள் ஊற வைக்கவும்.பின்னர் குக்கரில் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து மூன்று விசில் வைத்து,எடுத்து ஒரு தட்டில் வைத்து ஆறவிடவும் அல்லது பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கொதித்ததும் அரிசியை சேர்த்து வெந்ததும் வடித்து எடுத்து ஆறவிடவும்.
- 2
வெங்காயம்,பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.எலுமிச்சை சாறு பிழிந்து வைக்கவும்.
- 3
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை,வேர்க்கடலை
சேர்த்து நன்கு வதக்கவும். - 4
பின்னர் மஞசள் தூள்,உப்பு சேர்த்து வதக்கவும்.
- 5
நன்கு வதங்கியதும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 6
அதன் பின் உதிரியாக வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து நன்கு கலக்கவும்.
- 7
சாதம் சேர்த்து இரண்டு நிமிடங்கள் நன்கு கலந்து இறக்கினால் சுவையான எலுமிச்சை சாதம் தயார்.
- 8
இப்போது எடுத்து பரிமாறும் பௌலில் சேர்க்கவும். உருளைக்கிழங்கு
பொரியலுடன் சேர்த்து சுவைக்கக் கொடுக்கவும். - 9
இந்த எலுமிச்சை சாதம் பாராம்பரிய முறைப்படி எளிமையாக தயார் செய்யப்பட்டுள்ளது. விருப்பப்பட்டால் மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes












கமெண்ட் (2)