☘️கொத்தமல்லி சட்னி☘️👌

#pms family அற்புதமான சுவையான கொத்தமல்லி சட்னி செய்ய முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு வறுக்கவும். பின் அதனுடன் பூண்டு, சிறிய வெங்காயம் பச்சை மிளகாய்,சிறிய அளவு புளி சேர்த்து வதக்கவும். வதங்கிய பின் அதனுடன் தேங்காய் சிறிய துண்டுகளை சேர்த்து வதக்கவும்.பின் அதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து ஒரு வதக்கு வதக்கவும். வணங்கியதை ஆற விட்ட பின் அதனுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அரைத்ததும் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு தாளிக்கவும். தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும். நமது சுவையான கொத்தமல்லி சட்னி தயார்👍👍

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். கொத்தமல்லி இலைகளை சுத்தமாக தண்ணீரில் அலசி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
கடாயில் சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் ஊற்றி சூடானதும், அதனுடன் உளுத்தம் பருப்பு (அல்லது) கடலைப் பருப்பு சேர்த்து வதக்கவும்.
- 3
பின் அதனுடன் பூண்டு பற்களை சேர்த்து வதக்கவும். பூண்டை நன்கு வதக்கவும். பின் அதனுடன் 2 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 4
பூண்டு வெங்காயம் வதங்கியதும் அதனுடன் சிறிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.சிறிய வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் அதனுடன் சிறிது தேங்காய் துண்டுகளை சேர்க்கவும்.
- 5
பின் சிறிய தேங்காய் துண்டுகளை அதனுடன் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின் அதனுடன் சிறிது புளி, தேவைக்கேற்ப உப்பு ஒரு கைப்பிடி அளவு கொத்துமல்லி இலைகளை சேர்க்கவும்.
- 6
கொத்துமல்லி இலைகள் பச்சை நிறம் மாறாமல் எண்ணெயில் வதக்கவும். பின் வணங்கியதை ஆற விட்டு மிக்ஸி ஜாரில் போடவும்.
- 7
மிக்ஸி ஜாரில் போட்டதை அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் தாளிப்பு கரண்டி (அல்லது) சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விடவும்.
- 8
கடுகு பொரிந்தவுடன் கறிவேப்பிலை போடவும். பின் அதனுடன் 2 வரமிளகாய் போடவும். பின் தாளித்ததை எடுத்து அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி சட்னியில் ஊற்றவும்.
- 9
நமது சுவையான கொத்தமல்லி 🍀🍀சட்னி தயார்👍 கொத்தமல்லி சட்னி இட்லி,தோசைக்கு அருமையான காம்பினேஷன் ஆக இருக்கும். வீட்டில் உள்ள அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்👌👌 நன்றி😊
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட் (5)