பைனாப்பிள் கேசரி மெதுவடை

#cookerylifestyle
உளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம்
பைனாப்பிள் கேசரி மெதுவடை
#cookerylifestyle
உளுந்து மற்றும் பைனாப்பிள் இரண்டும் உடலுக்கு நல்லது இதை பயன் படுத்தி ஒரு ஸ்வீட் மற்றும் காரம் செய்து கொடுக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பழங்கள் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இந்த மாதிரி ஸ்நேக்ஸ் உடன் சேர்த்து செய்து கொடுக்கலாம்
- 2
பைனாப்பிள் ஐ தோல் சீவி நறுக்கி கொள்ளவும் 1/4 கப் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட்டு அதில் பைனாப்பிள் துண்டுகளை போட்டு ஐந்து நிமிடம் வரை வேகவிடவும் பின் ஆறவிட்டு இதை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு பிழிந்து எடுக்கவும்
- 3
நெய் விட்டு சூடானதும் ரவை சேர்த்து கிளறவும் பின் கொதிக்கும் நீர் 2 கப் சேர்த்து நன்கு கிளறவும் ரவை வெந்ததும் பைனாப்பிள் ஜீஸ் சேர்த்து நன்கு கிளறவும் கெட்டியானதும் சர்க்கரை சேர்த்து கிளறவும் பின் மஞ்சள் புட் கலர் சேர்த்து நன்கு கிளறவும் பின் நெய் விட்டு முந்திரி திராட்சை சேர்த்து வறுத்து கொட்டி ஏலத்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
- 4
மெதுவடை செய்ய உளுந்தை இரண்டு மணி நேரம் வரை ஊறவிடவும் பின் கழுவி தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாயை சேர்த்து கறிவேப்பிலை கொத்தமல்லி தழை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கைகளில் சிறிது தண்ணீர் தொட்டு கொண்டு மாவை எடுத்து நடுவில் கட்டை விரல் கொண்டு ஓட்டை போட்டு சூடான எண்ணெயில் போடவும் பின் மெதுவாக திருப்பி போட்டு இரண்டு புறமும் வேகவிட்டு எடுக்கவும்
- 5
சுவையான ஆரோக்கியமான பைனாப்பிள் கேசரி மெதுவடை ரெடி
Keywords
Similar Recipes
More Recipes














கமெண்ட்