சிக்கன் சமோசா
#cookwithsugu
சிக்கன் சமோசா
சமையல் குறிப்புகள்
- 1
மேல்மாவிற்கு மைதா மாவுடன், உப்பு, சூடான எண்ணெய் சேர்த்து கலந்து தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
- 2
மாவை 2 மணி நேரம் ஊற விடவும். பின்னர் சிறு சிறு உருண்டையாக பிரித்து உருட்டி கொள்ளவும்.
- 3
வெங்காயம், கேரட், பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
- 4
பானில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் சேர்த்து வதக்கவும். அதிலேயே இஞ்சிபூண்டு விழுது, உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.
- 5
பச்சை வாசம் போனதும் சிக்கன் சேர்த்து பிரட்டி விடவும். தூள் வகைகள் சேர்த்து மசாலா வாசம் போகும் வரை வதக்கவும். மல்லிதழை சேர்க்கவும்.
- 6
மைதா உருண்டையை எடுத்து சப்பாத்தி கல்லில் சிறு வட்டமாக தேய்த்து கொள்ளவும்.அதில் ஒரு கரண்டி சிக்கன் கலவையை நடுவில் வைக்கவும். பின்னர் தண்ணீர் தொட்டு முக்கோணமாக மடித்து வைக்கவும்.
- 7
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் மடித்து வைத்துள்ள சமோசாக்களை போட்டு இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
சுவையான சிக்கன் சமோசா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes





















கமெண்ட் (2)