1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
India

#cookwithsugu
#mycookingzeal
ஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு

1.Wheat pinwheel 2.wheat momos 3.wheat pocket 4.wheat paratha

#cookwithsugu
#mycookingzeal
ஒரே மாவு ஒரே மசாலா நான்கு விதமான செய்முறைகள் . கோதுமை மாவில் நான்கு விதமான மாலைச் சிற்றுண்டி மற்றும் காலை உணவு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 250 கிராம் கோதுமை மாவு
  2. ஒரு ஸ்பூன் சமையல் எண்ணெய்
  3. தேவையான அளவு உப்பு
  4. தேவையான அளவுதண்ணீர்
  5. மசாலா செய்ய
  6. 2உருளைக்கிழங்கு வேக வைத்தது
  7. 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  8. 1பச்சை மிளகாய் பொடியாக
  9. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  10. 2 கொத்து கொத்தமல்லி இலை
  11. ஒரு ஸ்பூன் சீரகம்
  12. ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள்
  13. ஒரு ஸ்பூன் கரம் மசாலா தூள்
  14. ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள்
  15. ஒரு ஸ்பூன் மல்லித் தூள்
  16. தேவையான அளவு உப்பு
  17. 2 ஸ்பூன் சமையல் எண்ணெய்
  18. பொரிப்பதற்கு சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    மாவு செய்முறை :கோதுமை மாவில் சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன் தேவையான உப்பு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் கலந்து பிசையவும் சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்

  2. 2

    மசாலா செய்முறை : அடுப்பில் கடாயை வைத்து ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஒரு ஸ்பூன் சீரகம் கருவேப்பிலை தாளித்து பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்

  3. 3

    பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் மல்லித் தூள் சேர்த்து வதக்கவும்

  4. 4

    வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதனுடன் சேர்த்து தேவையான உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும் ஒரு நிமிடம் வதக்கிய பின் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும் ஸ்டஃப்பிங் மசாலா ரெடி

  5. 5

    1.wheat pinwheel: பிசைந்து வைத்த கோதுமை மாவில் பெரிய அளவு உருண்டையாக எடுத்து சப்பாத்தி கட்டையில் வைத்து மெல்லியதாக சப்பாத்தியாக தேய்க்கவும் சப்பாத்தியில் உருளைக்கிழங்கு மசாலாவை எல்லா இடங்களிலும் தடவி விடவும்

  6. 6

    சப்பாத்தி படத்தில் காட்டியுள்ளவாறு சுற்றவேண்டும் இரண்டு பக்கங்களையும் நன்றாக ஒட்டிக் கொண்டு கத்தியால் சிறுசிறு பாகங்களாக வெட்டவும்

  7. 7

    அடுப்பில் கடாய் வைத்து வெட்டிய பின்வீல் துண்டுகளை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி திருப்பி திருப்பி போட்டு வேகவைத்து இறக்கவும் wheat pinwheel ரெடி

  8. 8

    2. Wheat pocket:
    கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சின்ன வட்டமாக தேய்த்து கத்தியால் சதுர வடிவில் வெட்டிக் கொள்ளவும் நடுவில் உருளைக்கிழங்கு மசால் வைத்து மடித்து விடவும் மூன்று பக்கங்களையும் ஒட்டி ஃபோக் கரண்டியால் லேசாக அழுத்திவிடவும்

  9. 9

    அடுப்பில் எண்ணெய் காய வைத்து நன்கு காய்ந்ததும் செய்து வைத்துள்ள கோதுமை பாக்கெட்டுகளை போட்டு வறுத்து எடுக்கவும் wheat pocket ரெடி

  10. 10

    3. Wheat momos:
    கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சிறு வட்டமாக சப்பாத்தி போன்று தேய்த்து நடுவில் மசாலாவை வைத்து சேலையை மடிப்பது போல் இரு ஓரங்களையும் மடித்து நன்றாக ஒட்டி வைக்கவும்

  11. 11

    இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி தட்டு வைத்து செய்து வைத்துள்ள மோமோஸை வைத்து மூடிவைத்து ஆவியில் 5 நிமிடம் வேக வைத்து இறக்கவும் wheat veg momos ரெடி

  12. 12

    4. Wheat paratha:
    கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி விரல்களால் கிண்ணம் போல் செய்து மசாலாவை உள்ளே வைத்து உருண்டையாக உருட்டி உள்ளங்கையில் வைத்து சிறு அழுத்தம் கொடுக்கவும்

  13. 13

    அடுப்பில் கடாயை வைத்து செய்து வைத்துள்ள பராத்தாக்களை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி இரண்டு புறமும் திருப்பி திருப்பி விட்டு நன்கு வேக வைத்து எடுக்கவும் wheat paratha ரெடி

  14. 14

    இது மாதிரி நான்கு விதமான ஈவினிங் ஸ்நாக்ஸ் மற்றும் காலை உணவு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கும் பிடிக்கும் விரும்பி உண்பர்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Vijayalakshmi Velayutham
அன்று
India
cook and Eat: tasty food and healthy food
மேலும் படிக்க

Similar Recipes